20 Oct 2024

கங்குல் = இருள், இரவு

கங்குல் = இருள், இரவு


  கங்குல்  யானைக் காலில்  படுத்தினும்  படுக்கலாம்
சுடர்  விழிப் பகுவாய சிங்க  வாயிடைச்  செலுத்தினும்  செலுத்தலாம் -தென் புலத்தவர்  கோமான்
வெங்கண்  நரகிடை  வீழ்த்தினும்  வீழ்த்தலாம்              விடையேறும்   எங்கள்  நாயக  தமிழறியார்கள்  முன்
இயம்புதல்  தவிர்ப்பாயே



கங்குல்  யானை = கரிய நிறம் கொண்ட யானை 

கரிய யானை காலில் படுக்க விட்டாலும் விடலாம்;சிங்கத்தின் வாயில் போட்டாலும் போடலாம் 
சிவனே  - நரகத்தில் என்னை விட்டாலும் விடலாம் ;ஆனால்  தமிழ் தெரியாதவர் முன்பு என்னை பேச சொல்லாதே... 

  கங்குலும் பகலும் கண்டுயி லறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்

                                                                       திருவாய்மொழி

கங்குலும் = இரவும்  
இரவும் பகலும் தூக்கம் இன்றி கண்ணீர் துளிகள் கைகளை நனைக்க 

 

  எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

                                                                       குறுந்தொகை  


கங்குல் வெள்ளம் =இரவாகிய வெள்ளம், கடலைக் காட்டிலும் பெரியது

 தலைவனின் பிரிவால் வருந்திய தலைவியிடம் - தோழி, “நீ பிரிவைப் பொறுத்துக்கொள்” என்று  கூறுகிறாள். . அதற்கு  தலைவி, “ மாலைநேரம் எனக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கிறது. அதைப் பொறுத்துக் கொண்டாலும், இரவு நேரம் மாலைநேரத்தைவிட அதிகமாக என்னை வருத்துகிறது. இரவுக்கடலை எப்படி கடப்பது ? என்கிறாள் 

  தயங்கு இணர்க் கோதை தன்மேல் தண் என வைத்த மென்தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடை அறுத்த கங்குல் இருள் இடை ஏகினானே

                                                                            சீவகசிந்தாமணி

கங்குல் இருள் இடை ஏகினானே = கரிய நடு  இரவில் சென்றான். 
தலைவி தன்மேல் குளிர்ச்சியாக வைத்திருந்த கையை வருந்தா வண்ணம் எடுத்து வைத்துவிட்டு; விருப்பம் பொருந்திய உடம்பை விட்டு  உயிர் பிரிவதைப் போல, யாவரும் செல்ல விரும்பாத நடு  இரவில், இருளிலே செல்லத் தொடங்கினான். 
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி