- இவரது பெயரில் சென்னை அண்ணா சாலையில் நூலகம் உள்ளது.
- இந்திய அரசு மட்டும் அல்லாமல் மலேசியா அரசும் தபால் தலை வெளியிட்டுள்ளது .
- 1968 ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் இவர்.
- 1980-ல் எம். ஜி. ஆர். இவருக்கு 'செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தை வழங்கினார்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் இவருக்கு "மொழிஞாயிறு" என்ற பட்டத்தை வழங்கினார்.
- தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுபவர்.
- தமிழ் மொழியிலிருந்து சொற்கள் எப்படி பிறமொழிகளுக்குச் சென்று புதிய சொற்கள் உருவானது என்பதைப் பற்றி "The Primary Classical Language Of The World" என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினர்.
- இவரது இயற்பெயர் "தேவநேசன்"
இவர் ......
"
மொழிஞாயிறு" தேவநேயப் பாவாணர்.
தேவநேசன் என்ற இயற்பெயரை தமிழாக்கம் செய்து தேவநேயப் பாவாணர் என்று மாற்றிக்கொண்டார்
காலம்: 7 பெப்ரவரி 1902 – 15 சனவரி 1981
பிறந்த இடம் : கோமதிமுத்துபுரம் (தென்காசி அருகில்)
பெற்றோர் பெயர்: தந்தை - ஞானமுத்து; தாயார் -பரிபூரணம்
பன்மொழி வல்லுநர்தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றிந்தவர்.
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநர்.
படைப்புகள்:
அவர் பல கட்டுரைகள், உரைநூல்கள், தமிழின் தொன்மை மற்றும் தமிழர் வாழ்வு முறை பற்றி எண்ணற்ற தனி நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள்
தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, பண்டை தமிழ் நாகரிகமும் வரலாறும், சொற்பிறப்பியல், வேர்ச்சொற் கட்டுரைகள் போன்றவை மிகச்சிறந்த ஆராய்ச்சி நூல்கள்.
இவரின் `சொற்பிறப்பியல்' நூலைப் பாராட்டி, முன்னுரை எழுதிக்கொடுத்துள்ளார் மறைமலை அடிகளார்.
அவரின் படைப்புக்களை இங்கு
காண்க.
மேலும் அறிய http://www.devaneyapavanar.net/
https://www.youtube.com/watch?v=8m33f71Slik