முகவுரை
பல்லவர்கள் காலம் முதல் சோழர் காலம் வரை ( 7ஆம் நூற்றாண்டில் இருந்தது 9ஆம் நூற்றாண்டு வரை) நடந்த வரலாற்றுச் செய்திகளை கற்பனையுடன் கலந்து "மூன்று தொகுப்பு " (Triology) கதைகளாக கல்கி தந்துள்ளார்.
1. சிவகாமியின் சபதம் - பல்லவர்கள் - 7ஆம் நூற்றாண்டு
2. பார்த்திபன் கனவு - பல்லவர்கள் + சோழர்கள் -7-8 ஆம் நூற்றாண்டு
3. பொன்னியின் செல்வன் - சோழர்கள் 8ஆம் நூற்றாண்டு
பொன்னியின் செல்வன் பற்றி அனைவர்க்கும் இப்போது தெரியும். இந்த தொகுப்பு, மற்ற இரண்டு நூல்களை பற்றி தெரியாதவற்கு, அவைகளை அறிமுகம் செய்வதே நோக்கம்.
சிவகாமியின் சபதம்
நூலாசிரியர் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
ஆட்சி: பல்லவர்கள், சாளுக்கியர்கள்
காலம்: 7 ஆம் நூற்றாண்டு
கதாபாத்திரங்கள்: முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் , முதலாம் நரசிம்ம பல்லவன், புலிகேசி, சிவகாமி , பரஞ்சோதி
பாகங்கள்: 2
வகை: வரலாற்றுப் புதினம்
கதைச் சுருக்கம்
காஞ்சியில் நடந்த பல்லவ-சாளுக்கிய ( மஹேந்திரவர்மன் - புலிகேசி ) போருக்கு பிறகு, சாளுக்கிய மன்னர் புலிகேசியால் சிறையெடுக்கப்பட்டு, தன் காதலன் நரசிம்மவர்மன் I ( மஹேந்திரவர்மனின் மகன் ) வாதாபி நகரை வென்று தன்னை மீட்கும் வரை, சாளுக்கிய தலைநகரம் வாதாபியை விட்டு திரும்பிச்செல்ல மாட்டேன் என்ற சபதமே " சிவகாமியின் சபதம்" கதை.
முக்கிய நிகழ்வுகள்
- காஞ்சி-வாதாபி போர்,
- முதலாம் மகேந்திரவர்மன் இறப்பு,
- புலிகேசியின் வீழ்ச்சி,
- சிவகாமியின் சபதம்,
- முதலாம் நரசிம்மன் வாதாபியை வென்றது,
- நரசிம்மன்- சிவகாமி காதல்.
பார்த்திபன் கனவு
நூலாசிரியர் - கல்கி கிருஷ்ணமூர்த்தி
ஆட்சி: பல்லவர்கள்- சோழர்கள்
காலம்: 7 -8 ஆம் நூற்றாண்டு
கதாபாத்திரங்கள்: முதலாம் நரசிம்ம பல்லவன், பார்த்திப சோழன், விக்ரம சோழன்
பாகங்கள்: 1
வகை: வரலாற்றுப் புதினம்
கதைச் சுருக்கம்
சோழர்கள் பல்லவர்களுக்கு கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காலத்தில் ( விஜயால சோழன் காலத்திற்க்கு முன்னால்) பார்திப சோழன் பல்லவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து போரிட்டு உயிர் நீத்தான். சுதந்திர சோழ ஆட்சி என்பதே பார்த்திபனின் கனவு - இதை அவன் மகன் "விக்ரம சோழன்" நிறைவேற்றினானா? இல்லையா என்பதே இந்த நூலின் கதை.
இந்த புதினத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகள்
- மாமல்லபுர கட்டிட வேலைகள்,
- பார்த்திப சோழனின் கனவு,
- விக்ரமனின் நாடு கடத்தல்,
- சோழர் ஆட்சி ஆரம்பம்.
பொன்னியின் செல்வன்
நூலாசிரியர் - கல்கி கிருஷ்ணமூர்த்தி,
ஆட்சி: சோழர்கள்,
காலம்: 9 ஆம் நூற்றாண்டு;
கதாபாத்திரங்கள்: சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், குந்தவை, வந்தியதேவன், பழுவேட்டரையர்
பாகங்கள்: 5
வகை: வரலாற்றுப் புதினம்
கதைச் சுருக்கம்
சோழ மன்னர் (சுந்தர சோழர் ) மரண படுக்கையில் மகள் குந்தவையோடு தஞ்சாவூரில் உள்ளார். பட்டத்து இளவரசன் ஆதித்யா கரிகாலன் காஞ்சியில் உள்ளான். இரண்டாம் மகன் அருண்மொழிவர்மன் போரின் காரணமாக இலங்கையில் இருந்தான். இந்நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் சோழ குலத்தையே அழிப்பதற்க்காக, இந்த மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி, சோழ நாட்டிற்குள்ளும், நந்தினி சோழ அரண்மனைக்குள்ளும் வந்துவிட்டார்கள். அவர்களின் சதி நிறைவேறியதா ? யார் சோழ அரசனாக முடி சூடினார் என்பதே இந்தக் கதை சுருக்கம்.
இந்த புதினத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகள்
- பாண்டியர்களின் வஞ்சம்,
- உள்நாட்டு சூழ்ச்சி,
- ஆதித்த கரிகாலனின் மரணம்,
- முடிசூடும் விழா.
முடிவுரை
சிவகாமி சபதம் மற்றும் பார்த்திபன் கனவு கதைகளை படித்து விட்டு பிறகு பொன்னியின் செல்வன் கதையை படித்தால் இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும்.