களிறு - ஆண் யானை - Kaliru ( Male Elephant)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு
திருக்குறள்
உடல் முழுவதும் அம்பு தைத்த பின்னும் போர்க்களத்தில் பின்வாங்காத ஆண் யானை போன்று எடுத்த வினை கை கூடும் வரை எந்த துன்பம் வந்தாலும் பின் வாங்க மாட்டார் ஊக்கம் உடையவர்கள்.
பிடி - பெண் யானை - Pidi - Female Elephant
....ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே!
புறநானூறு
ஒரு யானை படுக்கும் நில அளவில் ஏழு யானைக்கு உணவு விளைவிக்கும் அளவிற்கு வளமான நாடு உடைய அரசனே.