இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர்.
இவர் தமிழ்நாட்டின் தந்தை என போற்றப்படுபவர்.
இவரின் முயற்சியால்தான் மெட்ராஸ்(சென்னை) மற்றும் திருத்தணிதமிழ்நாடுடன் இணைந்தது.
இவர் வ.உ.சி யின் சுயசரிதையை எழுதி, அவருக்கு "கப்பல் ஒட்டிய தமிழன்" என்ற பெயரை அளித்தார்.
இவர் பாரதியாரின் தீவிர ரசிகர், பாரதி பற்றிய ஆய்வு நூல்கள் பல எழுதியுள்ளார்.
இவரின் சிலை சென்னை தியாகராய நகரில் நிறுவப்பட்டுள்ளது.
இவர் சிலப்பதிகாரத்தின் சிறப்புகளைப் பரப்பி "சிலம்புச் செல்வர்" என்ற பட்டம் பெற்றார்.
இவர் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
இவர் ..
....
திரு மயிலை பொன்னுசாமி சிவஞானம் (ம. பொ. சி) - (26 June 1906 – 3 October 1995).
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்த இவரின் பள்ளிப் படிப்பு ஏழ்மையின் காரணமாக மூன்றாம் வகுப்போடு முடிந்தது. தாமே முயன்று சுய கல்வி கற்றார்.
ஆந்திர பிரதேசம் 'மெட்ராஸ் மனதே' என்று கிளர்ச்சித்தப் பொழுது , 'தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழக்கமிட்டு, போராடி தலைநகரை தமிழ்நாடோடு தக்கவைத்தார். இலக்கிய மற்றும் வரலாற்று தரவுகளை அளித்து, திருவேங்கடம்(திருப்பதி) முதல் குமாரி வரை தமிழ்நாடே என்றார். திருவேங்கடம் கிடைக்கவில்லை என்றாலும் திருத்தணி தமிழ்நாட்டிற்கு கிடைத்தது இவரின் முயற்சியே.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றித் தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார்இவர் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் செய்த தொண்டினால் 'தமிழ்நாட்டின் தந்தை' ஆனார்.
இவர் சிறையில் இருக்கும்பொழுது சிலப்பதிகாரத்தின் அறிமுகம் கிடைத்தது. சிலப்பதிகாரத்தின் சிறப்புக்களை பரப்ப "சிலப்பதிகார விழா" 1950ல் நடத்தினர்.
இவர் எழுதிய நூல்கள்
விடுதலை போரில் தமிழகம்
வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, தொல்காப்பியத்திலிருந்து பாரதி வரை.
சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு, சிலப்பதிகார ஆய்வுரை.
வீரபாண்டிய கட்டபொம்மன், சுதந்திர வீரன் கட்டபொம்மன்..