15 Aug 2021

இன எழுத்துக்கள்

சிங்கம், தங்கம், தேங்காய் = ஏன் 'ங்க' சேர்ந்தே  வருகின்றது? 

ஞ்சள், வஞ்சம், பஞ்சு = ஏன் 'ஞ்சு' சேர்ந்தே  வருகின்றது?

‘ங்’ & ‘க’ , இரண்டும்  இனஎழுத்துக்கள் 😊😊

இன எழுத்துக்கள்
இனம் = ஒத்த பண்புகள்.
பறப்பவைகளை  பறவைகள்  என்றும், ஊர்ந்து செல்வதை ஊர்வனைகள் என்றும் இனம் பிரிகின்றோம் . அதேபோல் எழுத்துக்களும் சில காரணங்களால் இனம் கொள்ளும். 

1.    வடிவு (எழுத்தின் உருவம்).
2.    மாத்திரை  (எழுத்தின் ஒலி). 
3.    பிறப்பு  (பிறக்கும் இடம் = மார்பு, கழுத்து, தலை, மூக்கு).
4.    தொழில்/முயற்சி  (உதடு, நாக்கு, பல், மேல்வாய்{அண்ணம்} ).
5.    பொருள் ( ஒரே பொருள் தரக்கூடிய சொற்கள் )

முதலிய காரணங்களால் ஒத்துப்போகும். அவ்வாறு ஒத்துப்போகும் எழுத்துக்களை இனஎழுத்துக்கள்  என்று கூறுவோம். 

‘ங்’ & ‘க’ தொழில்/முயற்சி காரணத்தினால் இணைந்தன.             
ங்கணம், சஞ்சலம், பண்டம், தந்திரம், பம்பரம், நன்றி  

இந்த சொற்களை நோக்கினால் தெரியும், மெல்லினமெய் (ங், ஞ், ..., ன்) எழுத்துக்களை அடுத்து எப்பொழுதுமே  அதற்கான  வல்லின உயிர்மெய் (க, ச, .....,ற ) இன எழுத்து தொடரும். 

 | ங் க |  ஞ் ச |  ண் ட |  ந் த |  ம் ப |  ன் ற

ஏன் இப்படி சேர்ந்தே வரவேண்டும் ?   ஏதாவது சட்டமா?  இல்லை இதுதான் இயல்பா?
ஆம் ! இது இயல்புதான். ‘ங்’ உச்சரித்தப்பின் அடுத்த எழுத்தான ‘’ (க,கா,கி, ...கௌ) இயல்பாகவும், எளிதாகவும் தோன்றும்.

அதேப்போல் 'ஞ்’ -ற்கு  'ச,சா...சௌ'  இயல்பாக தோன்றும்.

எப்படி இயல்பானது?
இதற்கு எழுத்துக்களின்  பிறக்கும் முறை தான் காரணம்

எழுத்துக்களின் பிறப்பு

எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள். உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருந்தி, உதடு, நாக்கு,  பல்,  மேல்வாய் ஆகிய இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன.

எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு, கழுத்து, தலை, மூக்கு முதலானவற்றை இடப்பிறப்பு எனவும்

 உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) முதலான உறுப்புகளின் தொழில்(முயற்சி) வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் வழங்குவர்.

க், ங் - இவ்விரு மெய்களும் நாவினது முதற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன

ச், ஞ் - இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.

ட், ண் - இவை நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.

த், ந் - மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.

ப், ம் - மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, இவ்வெழுத்துகள் பிறக்கும்.

ற், ன் - இவை, மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

தொழில்/முயற்சி காரணத்தினால் இரு எழுத்துக்களும் இணைந்து இனஎழுத்துக்களாகின.   


உயிர் எழுத்துக்களின் இனயெழுத்துக்கள் 

வடிவம், பிறக்கும் இடம், ஒலிக்கும் முறை ஆகிய காரணங்களால் இணையும் 

ஆ - அ  

ஈ - இ   

ஊ - உ 

ஏ - எ 

ஓ - ஒ 

ஐ - இ    (ஐ = அ + இ)

ஒள - உ  (ஒள = அ +  உ)



வல்லினமும் அதற்கான மெல்லினமும் இன எழுத்துக்கள்.

இடையினத்திற்கு இன எழுத்துக்கள் இல்லை.


எங்கு இந்த இன எழுத்துக்கள் பயன்படும் ?

கவிதையில் ( மோனை பயன்பாட்டில் ) , பழமொழிகளில்  ...

அன்பே ஆருயிரே / அன்பே இன்னுயிரே  = இதில் "ன்பே ருயிரே " என கூறுவது எளிமையாக உள்ளது.

கல உழுவதை விட
ழ உழு”

டி காத்துல
ம்மியும் பறக்கும்”

விதிவிலக்குள்:
வேற்று மொழி சொற்கள், மொழிபெயர்த்த புது தமிழ்ச்சொற்கள், சொற்றொடர்கள், பண்புத்தொகை etc.,

பயிற்சி
ஒரு தமிழ் கட்டுரை எடுத்து, அதில் வரும் மெல்லின மெய்ற்கு  அடுத்து  வரும் எழுத்து அதன் வல்லின இணை எழுத்தா என்று பாருங்கள்.  
ஆக்கம்
Ashwin, Ram & Smruthi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி