14 Jan 2022

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்


"மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
 தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
 கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
 பசிவந்திடப் பறந்து போம்!"

                                                                          ஔவையார்
1. மானம்
2. குடிபிறப்பு
3. கல்வி
4. வண்மை (வள்ளல் தன்மை,குணம்)
5. அறிவு
6.தானம் (ஈகை)
6. தவம்
7. உயர்வு
9. தாளாண்மை  (தொழில்)
10. தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் மோகம்

பசி வந்தால்  நாம்  சிறப்பாக கருதும் இந்த பத்தும் பொருட்டாக இருக்காது.  பத்து நாட்கள் பட்டினியாக இருப்பவனுக்கு முன் உணவை தவிர வேறு எதுவும் பொருட்டாக இருக்காது என்பது இதன் பொருள்.







ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி