சிலேடை
ஒரு சொல்லோ அல்லது சொல் தொடரோ பல பொருள் தருமாறு அமையப்பாடுவது சிலேடையாகும். சிலேடை அணி இலக்கண வகையில் ஒன்றாகும்
இதற்கு “இரட்டுற மொழிதல்” என்ற பெயரும் உண்டு . இரண்டு பொருள் பட கூறுவது ஆகும்.
செம்மொழிச் சிலேடை
சொல்லை பிரிக்காமலேயே பல பொருள் தருவது
"வேலை"யில் மூழ்கிவிட்டான்
பொருள் 1 - என்ன சுற்றி நடக்கிறது என்பதை அறியாமல் செய்கின்ற வேலையில் மூழ்கி விட்டான்.
பொருள் 2 - வேலை என்றால் கடல் - கடலில் மூழ்கி விட்டான்.
வேலை என்ற ஒரு சொல் செம்மொழி சிலேடையாக விளங்குகிறது.
சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்
இது தொடர் செம்மொழி சிலேடை . எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது.
ஒருவகையில், சீனிவாசன் -"சர்க்கரையில் வாசம் செய்யும் எறும்பு" பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது.
பிரிமொழிச் சிலேடை
பிரித்து படித்தால் பல பொருள் தருவது
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது
இந்த காளமேக புலவரின் பாடல்
பாம்புக்கும் பொருந்தும் ,
வாழை பழத்துக்கும் பொருந்தும்
பொருள் 1 - பாம்பு நஞ்சிருக்கும் = நஞ்சு + இருக்கும் - (விஷம் இருக்கும்)
தோலுரிக்கும்= தோலை உரித்துக் கொள்ளும்
நாதர்முடி மேலிருக்கும் = சிவன் தலையில் இருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது = சீறி அதன் பல் நம் மீது பட்டால் உயிர் மீளாது (தப்ப முடியாது)
பொருள் 2 - வாழை பழம்
நஞ்சிருக்கும் = நஞ்சி + இருக்கும் -நன்றாக பழுத்தால் நஞ்சி விடும். (நைந்து இருக்கும்)
தோலுரிக்கும்= அதன் தோலை உரித்தால் தான் பழம் கிடைக்கும்
நாதர்முடி மேலிருக்கும் = பஞ்ச அமிர்த பழத்தில் ஒன்றை உள்ள வாழை பழம் அபிஷேகம் செய்யும் பொது சிவன் தலையில் வைக்க படும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது = வெஞ்சினமாக - (உணவோடு பழத்தை சாப்பிட்டால்) வெண்மையான பற்கள் பட்ட உடனே வயிற்றுக் குள்ளே சென்றுவிடும்
காளமேகம் சிலேடை என்றாலே காளமேகம் தான். சிலேடை பாடுவதில் மிகவும் வல்லவர்.
கண்ணதாசன் முதன்முதலில் வானொலி நிலையத்தில் காளமேகத்தை பற்றிய கட்டுரை வாசித்தார். பிறகு அவர் மேல் ஈர்ப்பு கொண்டு அவரது தனி பாடல்கள் அனைத்தும் படித்தார்.
கி.வா.ஜா வின் சிலேடைகள் இவர் சிலேடைக்கு மிகவும் பெயர் போனவர்.
கீ.வா. ஜெகநாதன் ஒரு முறை மேடையில் இருக்கும் பொது அவர் அருகில் உள்ளவர் தனக்கு போடப்பட்ட மாலையில் இருந்து மலரை பிய்த்துகொண்டு இருந்தார். கி.வா.ஜா விடம் இப்போது பேச்சை ஆரம்பிக்கலாமா என்று கேட்டவுடன் அவர் " நான்
ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே இவர்
ஆரம் பிய்த்துவிட்டார் என்றார் (ஆரம் என்றால் மாலை - மாலையை பிய்த்து விட்டார் என்று பொருள்)
கி.வா.ஜ விடம் “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
“ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று பதிலளித்தார்.
விரைவில்
காளமேகம் பற்றியும்,
கி.வா.ஜா வின் சிலேடைகள் பற்றியும் ஒரு கட்டுரை காண்போம்.
காணொளி -
கி.வா.ஜா வின் சிலேடைகள்