பலரால் பாடப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக செய்தால் அதை தொகை நூல் என்று கூறுவது மரபு
அகப்பொருள் நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- கலித்தொகை
- அகநானூறு
புறப்பொருள் நூல்கள்
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
அகம் புறம் இரண்டும் கலந்தது
- பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களை பற்றிய பாடல்.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை