ந___றி
பேரன்: தாத்தா! இந்த இடத்துல ரெண்டு சுழியா
(ன) , மூணு சுழியா (
ண ) இல்ல காகா
'ந' வருமா ?
தாத்தா: அது என்ன "காகா -ந"?பேரன்: காகா வரையும்போது ஒரு '
ந' போடுவோமே, அதான்.
தாத்தா: தந்நகரமா ?பேரன்: அப்டினா? இது இன்னொரு ந வா?
தாத்தா: அதுக்கு பேரு
தந்நகரம், காகா ந இல்ல.
பேரன்: இவ்வளுவு நாள் அப்படித்தானே சொல்லிட்டு இருந்தேன், சரி இங்க எந்த 'ந' வரும்?
தாத்தா: இந்த மூணு '
ந ,
ண, ன' பேர சரியா சொன்னாலே உனக்கு தெரிஞ்சிடும்
. பேரன்: எப்படி சொல்றது?
தாத்தா:
ண் --> டண்ணகரம்
ந் --> தந்நகரம்
ன் --> றன்னகரம் பேரன் : எப்படி ண் --> ட, ந் --> த, ன் -->ற ?
தாத்தா: இன எழுத்துக்கள், முன்னாடி பாத்தோமே (இன எழுத்துக்கள்) பேரன்: ஆமா! பாத்தோம், மறந்துடுச்சு... வேற எப்படி ஞாபகம் வெச்சிக்கறது?
தாத்தா: மெய் எழுத்துக்கள் வரிசையில தொடர்ந்து வரும்
"க் ங் ச் ஞ்
ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள்
ற் ன்"
பேரன்: ஓ...சரி சரி ...
தாத்தா: இப்ப கடிதத்துல, இந்த வார்த்தைக்கு எது வரும் ? ந__றி ?பேரன்: றி வந்திருக்கு, அப்டினா
றன்னகரம் (ன) தான் வரும் "நன்றி"
தாத்தா: சரியா சொன்ன.. இன்னொரு பயிற்ச்சி உனக்கு ..பேரன்: சொல்லுங்க !
தாத்தா: "வ__டு" - இது ஒரு பூச்சி வகை பேரன்: பின்னாடி டு வந்திருக்கு, அப்டினா மூணு சுழி தான் வரும்.
தாத்தா: சரி தான், "வண்டு" ..ஆனா இனிமே டண்ணகரம்னு சொல்லணும் பேரன்: ஆமா ஆமா ..
டண்ணகரம்தாத்தா: "ஆ__தை" - இந்த பறவைக்கு கண்ணு பெருசா இருக்கும் பேரன்: தை வந்திருக்கு அப்டினா .. காகா ந ..இல்ல இல்ல..தந்நகரம் வரும்
தாத்தா: சரியா சொன்ன "ஆந்தை" , இப்ப எளிதா இருக்கா ?பேரன்: ஆமா தாத்தா ! எளிதா இருக்கு..
தாத்தா: ப__றி,
இப்ப என்ன வரும் ?
பேரன்: றன்னகரம்
தாத்தா: இந்த மாதிரி இலக்கண குறிப்புலாம் இந்த புத்தகத்துல எழுத்திற்கேன், தேவைப்படும் போது பாத்துக்கோ.பேரன்: சரி தாத்தா.
குறிப்பு புத்தகம்
"ண் ந் & ன் " பயன்பாடு
குறிப்பு #1 -பெயர் காரணம்
காகா ந --> தந்நகரம் ந் = த
மூணு சுழி --> டண்ணகரம் ண் = ட
ரெண்டு சுழி --> றன்னகரம் ன் = ற
காரணம்: ஒலிப்பு முறையின் ஒற்றுமை
(இன எழுத்துக்கள்) ண்ட = கு
ண்டு ,கொ
ண்டு, ம
ண்டபம்
ந்த = ச
ந்தி, வ
ந்து, ப
ந்து ன்ற = தெ
ன்றல், ம
ன்றம், இ
ன்று
ட், ண் - இவை நாவினது நுனி, அண்ணத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன.
த், ந் - மேல்வாய்ப் பல்லினது அடியை, நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.
ற், ன் - மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.
இன எழுத்துக்கள்குறிப்பு #2 - சொல்லின் முதல் எழுத்து
எப்பொழுதும் சொல்லின் முதல் எழுத்தாக
தந்நகர உயிர்மெய் மட்டுமே வரும்
நண்பன், நிலம், நீளம்
(
ணண்பன்,
னிலம்,
ணீளம் )
இந்த குறிப்புக்கள் "
ண் ந் & ன் " பயன்பாட்டுத் தவறுகளை குறைக்க உதவும்.