நூலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்
ஆட்சி: சேரர்கள்
காலம்: 8 - 9 ஆம் நூற்றாண்டு
கதாபாத்திரங்கள்: இரண்டாம் சேரமான் (குலசேகர ஆழ்வார்) மூன்றாம் சேரமான் (பாஸ்கர ரவிவர்மன்), மார்த்தாண்டவர்மன் (வேணாட்டடிகள்)
பாகங்கள்: 1
தகவல்: சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல். துடிசைக் கிழார் எழுதிய சேரர் வரலாறு என்ற நூலை அடிப்படையாய் கொண்டுள்ளது. ( பக்கம் 121-126)
அரேபியாவில் சேர அரசன் கல்லறை
அரேபியாவில் ஜாபர் என்ற இடத்தில் அப்துல் ரகிமான் சமேரின் என்ற சேர மன்னனின் சமாதி இருப்பதாக கூறப்படுகிறது. யார் இந்த அப்துல் ரகிமான் சமேரின் ? முன்றாம் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மனா ?
சேரமான் காதலி - கவிஞர் கண்ணதாசன்
மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற பாஸ்கர ரவிவர்மன் எவ்வாறு ராஜதந்திரங்களால் அரியணை ஏறி, சேர நாட்டில் வாணிகம் செய்ய வந்த ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்த பெண்ணின் மீது காதல் கொண்டு, சேர நாட்டை 12 பாகங்களாக பிரித்து கொடுத்து விட்டு அரேபியா சென்றான் என்பதை வரலாறும் கற்பனையும் கலந்த விறுவிறுப்பான கதையாய் கவிஞர் படைத்துள்ளார்.
இன்று வரை கேரளாவில் நம்பூதிரிகள் தங்கள் அரச உரிமையை சேரமான் பெருமாள் தந்த உரிமையாய் கருதுகின்றனர்.
இரண்டாம் சேரமான் பெருமாள் - ஆழ்வாரான கதை
இரண்டாம் சேரமான் மகன் மார்த்தாண்டன் - சைவ அடிகளான கதை ( வேணாட்டடிகள்)
மூன்றாம் சேரமான் - பாஸ்கர ரவிவர்மன் இஸ்லாம் மதத்திற்கு மாறிய காரணம்
மூன்று சமையங்களின் தத்துவங்களையும், யுஜினா என்ற கற்பனை பாத்திரத்தின் மூலம் காதல் ரசத்தையும், சேரன், நம்பூதிரிகள், சோழன், பாண்டியன், மலையரசன் போன்ற பாத்திரங்களின் மூலம் தந்திரம் மற்றும் அரசியல் சூழ்சசி போன்ற பல பரிமான்களை கவிஞர் இந்நூலில் புகுத்தியுள்ளார். 8ஆம் நூற்றாண்டு கேரளாவை தன் வர்ணனையால் கண்முன் கொண்டுவருகிறார் கவிஞர்.
இந்த புத்தக்தில் கவிஞருக்கே உரிய நடையில் சில வரிகள்
"யூஜினா எழுந்து நின்று விளக்கைச் சிறிது தூண்டிவிட்டாள். எண்ணெயில்லாமல் எரியும் அவளது வதன விளக்கு அதை விட பிரகாசமாய் எரிந்தது".
"கொல்லர் உலைக்களத்து பெருநெருப்பு போல் அவளது மூச்சே அவள் இதழ்களை சுட்டெரித்தது".
"உலகம் வெறுக்கும் போது உள்ளம் துணிந்துவிடுகிறது ; உலகம் மதிக்கும் பொது உள்ளம் அணைபோடுகிறது"
மேலும் படிக்க